Colombo (News 1st) தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து 5, 6 வருடங்களின் பின்னல் திரைக்கு வந்து பார்த்திருப்போம்.
ஆனால் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 12 வருடங்கள் திரைக்கு வராமல் இன்று, நாளை என்று இழுபறி நிலையிலிருந்த "மதகஜராஜா" திரைப்படம் இன்று(12) திரையரங்குகளில் வௌியாகியுள்ளது.
திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
வில்லனாக பிரபல நடிகர் சோனு சூட் மற்றும் நகைச்சுவை நடிகராக சந்தானம் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் மறைந்த நட்சத்திரங்களான மணிவண்ணன், சிட்டி பாபு, மனோபாலா மற்றும் மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நகைச்சுவை, பொழுதுபோக்கு கலந்துள்ள இந்த திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் என தமிழ் திரையுலத்தில் பல கோணங்களில் கலக்கும் மன்னன் விஜய் ஆண்டனி திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
12 வருடங்களுக்கு பின் திரைக்கு வந்துள்ள இந்த திரைப்படத்தில் 2012, 2013ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசிகள், தொலைக்காட்சிகள் என அன்றைய தொழில்நுட்பங்கள் எம்மை அப்படியே 12 வருட காலத்தை கடந்து சென்று வாழவைக்கின்றது.
திரைப்படத்தை பார்த்த இரசிகர்கள் நடிகர் சந்தானத்தை மீண்டும் காமெடியனாக திரையில் பார்ப்பது சந்தோசமளிப்பதாக தெரிவித்து வருகின்றனர்.