Colombo (News 1st) அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 13 பேர் வரை காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை சுற்றி தற்போது 4 காடுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காட்டுத்தீயால் இருப்பிடங்களை விட்டு வௌியேறிய மக்கள் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் விடுதிகளிலுள்ள அறைகளுக்கான நாள்வாடகை பாரிய அளவில் உயர்வடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே தீயணைப்பு வீரர்கள் போல் நடித்து வீடுகளை சூறையாட வந்த இருவரை கைது செய்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சர்வதேச ஊடங்கள் தெரிவித்துள்ளன.
கொள்ளையர்கள் மற்றும் விடுதிகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.