கடத்தப்பட்ட பாடசாலை மாணவி - CCTV

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி - CCTV

by Chandrasekaram Chandravadani 12-01-2025 | 5:03 PM

Colombo (News 1st) கம்பளை, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கடத்தப்பட்ட மாணவியை தேடுவதற்காகவும் சந்தேகநபரை கைது செய்வதற்காகவும் 3 விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என தெரிவிக்கப்படுகின்றது. 

மாணவியை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வேன் பொலன்னறுவையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேனின் சாரதி கைது கம்பளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.