சிரேஷ்ட எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் இறுதிக்கிரியை

இலக்கியத்துறையிலிருந்து விடைபெற்றார் சிரேஷ்ட எழுத்தாளர் அந்தனி ஜீவா

by Staff Writer 12-01-2025 | 10:32 PM

Colombo (News 1st) கலை இலக்கியத் துறையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய சிரேஷ்ட எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் இறுதிக்கிரியை கிருலப்பனை பொது மயானத்தில் இன்று(12) நடைபெற்றது.

கடந்த 40 ஆண்டு காலமாக கலை இலக்கியத் துறையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய பிரபல எழுத்தாளர் அந்தனி ஜீவா நேற்று முன்தினம்(10) காலமானார்.

கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியரான அந்தனி ஜீவா, மலையக இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட பெருமையைக் கொண்டவர்.

தோட்டத்துறை சார்ந்த பெண் எழுத்தாளர்களை இனங்கண்டு, அவர்களை இலக்கியப் பிரிவில் அறிமுகம் செய்துள்ளதுடன் அவர்களுடைய ஆக்கங்களை மலையகக் கலை இலக்கிய பேரவையின் மூலம் நூலுருப்படுத்திய பெருமையும் அன்னாரை சாரும்.

சிரேஷ்ட எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் இழப்பு நாட்டின் கலை இலக்கியத் துறைக்கு பேரிழப்பு என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது.