ஓய்வூதிய சம்பள அதிகரிப்பு நடைமுறை மீள அமுல்...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்ட ஓய்வூதிய சம்பள அதிகரிப்பு நடைமுறையை மீள அமுல்படுத்த தீர்மானம்

by Staff Writer 11-01-2025 | 3:21 PM

Colombo (News 1st) 2020ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கத்தால் இரத்துச் செய்யப்பட்ட ஓய்வூதிய சம்பள அதிகரிப்பு நடைமுறையை மீண்டும் அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2016 ஜனவரி முதலாம் திகதி முதல் 2019 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்காகவும் குறித்த ஓய்வூதிய சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.