Colombo (News 1st) இன்று(11) முதல் அமுலாகும் வகையில் மதுபானங்களுக்கான உற்பத்தி வரி 6 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக நிதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இதனிடையே, குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 750 மில்லிலீட்டர் மதுபான போத்தலின் விலை குறைந்தபட்சம் 106 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
ஏனைய மதுபான வகைகளின் விலைகளும் 5 வீதத்தால் அதிகரிக்குமென வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையால் இன்று(11) முதல் அமுலாகும் வகையில் சிகரெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் அறிவித்துள்ளது.
4 பிரிவுகளின் கீழ் விலை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 5 முதல் 10 ரூபா வரை சிகரெட் விலை அதிகரிக்கப்படவுள்ளது.