90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

by Staff Writer 10-01-2025 | 3:16 PM

Colombo (News 1st) 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

இதற்காக சில மருந்து நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கிற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதற்கமைய நகர்த்தல் பத்திரம் ஊடாக விடயங்களை முன்வைக்கவுள்ளதாக அவர் கூறினார்.

அதன் பின்னர் மருந்துகளின் விலைகளை குறைக்கும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் உயரதிகாரி தெரிவித்தார்.