பிரபல நிறுவனங்கள் ட்ரம்ப்க்கு நிதியுதவி

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவிற்காக அமெரிக்க பிரபல நிறுவனங்கள் நிதியுதவி

by Staff Writer 10-01-2025 | 7:42 PM

Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியத்திற்கு அமெரிக்காவின் Boeing மற்றும் Google நிறுவனங்கள் தலா ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளன. 

எரிசக்தி நிறுவனமான Chevron, தொழில்நுட்ப நிறுவனங்களான Meta, Amazon மற்றும் Uber ஆகியவை ட்ரம்ப் நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்கியுள்ளன.

டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பதவியேற்பு விழாவை YouTube-இல் நேரலையாக ஔிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்விற்காக கார் நிறுவனங்களான Ford, General Motors மற்றும் Toyota ஆகியனவும் தலா 1 மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளன.