Colombo (News 1st) இரண்டு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று(09) சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
சட்டத்தரணி K.M.S.திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி R.P.ஹெட்டிஆரச்சி ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி பிரதீப் ஹெட்டிஆரச்சி இதற்கு முன்னர் வர்த்தக மேல் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயற்பட்டுள்ளதுடன் சட்டத்தரணி K.M.S.திசாநாயக்க கண்டி மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டுள்ளார்.