Colombo (News 1st) மாத்தளை - பல்லேபொல - மடவல வீதியின் நாராங்கமுவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு (07) முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உக்குவெல பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் 65 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் குழந்தையொன்று காயமடைந்துள்ளது.
காயமடைந்த குழந்தை மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.