கம்மெத்த இல்லங்கள் தோறும் திட்டம் ஆரம்பம்

மக்களின் பிரச்சினைகளை கண்டறியும் கம்மெத்த இல்லங்கள் தோறும் திட்டம் ஆரம்பம்

by Staff Writer 08-01-2025 | 7:19 PM

Colombo (News 1st) 2025ஆம் ஆண்டுக்கான கம்மெத்த விசேட செயற்றிட்டமான இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் 8ஆம் கட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கெப்பிட்டல் மஹாராஜா குழுமத் தலைவர் சஷி ராஜமகேந்திரன் தலைமையில் இன்று(08) இனிதே ஆரம்பமானது.

நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி சுனில் கனோஜியா, குழுமப் பணிப்பாளரும் கம்மெத்த தலைவருமான ஷெவான் டேனியல் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் இன்றைய நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மனிதநேயப் பணியை மேலும் விரிவுப்படுத்தி கம்மெத்தவினால் முன்னெடுக்கப்படும் இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் நாளை(09) முதல் மீண்டும் மக்களை சந்திக்கவுள்ளது.

கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் கம்மெத்த வருடாந்த திட்டத்தின் முதற்கட்ட செயற்றிட்டமாகும்.

மக்களை நெருங்கி தகவல்களை பெற்று பிரச்சினைகளை கண்டறியும் நடவடிக்கையை கம்மெத்த பல்வேறு வழிமுறைகளின் ஊடாக முன்னெடுக்கின்றது.

இந்த வேலைத்திட்டங்கள் மக்களின் ஒத்துழைப்புடனேயே முன்னெடுக்கப்படுகின்றன.

கிராமத்திற்கு நன்மை பயக்கும் வகையில் பல திட்டங்களை முன்னெடுத்த கம்மெத்த நகரங்களின் அபிவிருத்திகளிலும் பங்களிப்பை வழங்கி சர்வதேசத்தில் பெருமதிப்பை பெற்ற திட்டமாக விளங்குகின்றது.

இந்த வெற்றிகரமான செயற்றிட்டத்தில் பேராதனை பல்கலைகழகத்தின் ஒத்துழைப்பும் கம்மெத்தவுக்கு தொடர்ச்சியாக கிடைக்கின்றது.

இம்முறை கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்திலும் பேராதனை பல்கலைகழகத்தின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளது.