மக்கா, ஜித்தா நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் ஜித்தா நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

by Staff Writer 08-01-2025 | 7:10 PM

Colombo (News 1st) சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் ஜித்தா நகரங்களுக்கு வௌ்ள அபாயம் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்காவுக்கான புனித யாத்திரை மேற்கொண்ட பலர் வௌ்ளத்தில் சிக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையை சவூதி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஜித்தா விமான நிலையத்தில் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மக்காவில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.