பஸ்கள் மோட்டார் வாகன பரிசோதகர்களின் சோதனைக்கு

பஸ்களை மோட்டார் வாகன பரிசோதகர்களின் ஊடாக சோதனைக்குட்படுத்த நடவடிக்கை

by Staff Writer 07-01-2025 | 7:46 PM

Colombo (News 1st) பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களை மோட்டார் வாகன பரிசோதகர்களின் ஊடாக சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருடனான கூட்டு வேலைத்திட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை முதல் குறித்த விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார்.

இதன்போது பஸ்களில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அபாயகரமான பொருத்துக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுமென அவர் கூறினார்.

இதனிடையே, முன்னெடுக்கப்படும் போக்குவரத்து செயற்றிட்டம் எவ்விதத்திலும் நிறுத்தப்பட மாட்டாதென பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென பொலிஸார் கூறினர்.