Colombo (News 1st) இராஜாங்கனை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 வயதான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி வீதியில் சென்று கொண்டிருந்த நாயொன்றுடன் மோதவிருந்த நிலையில் அதனை தடுப்பதற்கு முற்பட்ட வேளை வீதியில் குடைசாய்ந்து இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 12 சிறுமி உயிரிழந்துள்ளதுடன் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.