Colombo (News 1st) கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
கட்சிக்கான புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரையில், தாம் பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
ஒட்டாவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ட்ரூடோ இதனை அறிவித்தார்.
தனது குடும்பத்தினருடனான நீண்ட கலந்துரையாடலின் பின்னரே இராஜினாமா செய்யும் தீர்மானத்தை எடுத்ததாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
தாம் ஒரு போராளி என தெரிவித்த கனேடிய பிரதமர், பாராளுமன்றம் பல மாதங்களாக முடக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதனால் நாட்டிற்கு புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அவசியமாகும் எனவும் மார்ச் 24 ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் எனவும் ட்ரூடோ கூறினார்.
2015ஆம் ஆண்டில் தாம் நாட்டை பொறுப்பேற்றதை விட கனடா சிறந்த நாடாக விளங்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.