மாபெரும் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதி

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா தகுதி

by Staff Writer 05-01-2025 | 2:30 PM

Colombo (News 1st) 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றதுடன் இந்த வாய்ப்பை பெற்றது.

162 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி 181 ஓட்டங்களையும் பெற்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.