Colombo (News 1st) 2025ஆம் ஆண்டின் முதலாவது இருபதுக்கு 20 போட்டியை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 7 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் குசல் பெரேரா சதம் கடந்து 101 ஓட்டங்களை பெற்றார்.
அணித்தலைவர் சரித் அசலங்க 46 ஓட்டங்களை பெற்றார்.
219 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அணி சார்பில் ரச்சின் ரவீந்திரா 69 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
எவ்வாறாயினும் 03 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2 - 1 என நியூஸிலாந்து அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.