Colombo (News 1st) சைபர் தாக்குதல் காரணமாக தற்காலிகமாக செயலிழந்திருந்த அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
இதனிடையே சைபர் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ YouTube தளமும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ YouTube தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பில் கணினி குற்றத்தடுப்பு பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.