Colombo (News 1st) அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நபரொருவர் அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி உட்பிரவேசித்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தொடர்பற்ற விடயங்களை வௌியிட முயற்சித்தமையை அடுத்து இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.