விமானவிபத்திற்கு நட்டஈடு கோரிய அசர்பைஜான் ஜனாதிபதி

விமான விபத்திற்கு நட்டஈடு கோரிய அசர்பைஜான் ஜனாதிபதி

by Staff Writer 30-12-2024 | 7:40 PM

Colombo (News 1st) அசர்பைஜான் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் கசக்ஸ்தானில் விபத்திற்குள்ளானமைக்கான நட்டஈட்டை வழங்குமாறு அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ்(Ilham Aliyev) ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விமானம் மீது ரஷ்ய இராணுவத்தால் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பயணிகள், பணியாளர்கள், விபத்தால் சேதமடைந்த நிலத்திற்கு ரஷ்யா இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு காரணமானவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அசர்பைஜான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி அசர்பைஜான் எயார்லைன்ஸ் விமானம் கசக்ஸ்தானில் விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்திருந்தமை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


ரஷ்யாவினால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலிலேயே அசர்பைஜான் பயணிகள் விமானம் விபத்திற்குள்ளானதாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரால் முதன்முதலாக வௌிக்கொணரப்பட்டது.