Colombo (News 1st) புதிய இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே நாளை(31) ஓய்வு பெறவுள்ள நிலையில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நாளைய தினம்(31) ஓய்வு பெறவுள்ள நிலையில் புதிய கடற்படைத் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.