ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் புதிய இடத்திற்கு

ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றம்

by Staff Writer 30-12-2024 | 6:56 PM

Colombo (News 1st) ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி நிதியத்தின் புதிய அலுவலக வளாகம் கொழும்பு 01, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கட்டடத்தின் தரைத்தளத்தில் நிறுவப்படவுள்ளது.

இதுவரை லேக்ஹவுஸ் கட்டடத்திலேயே ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.