Colombo(News 1st) எத்தியோப்பியாவின் போனா(Bona) மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற ட்ரக் வாகனமொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.