Colombo (News 1st) நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தை அண்மித்த பகுதியில் கட்டடமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரும்புக் கம்பிகளால் தயாரிக்கப்பட்ட தற்காலிக கம்பிப்படிகளில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்த இவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த படிக்கட்டில் மின்சாரம் பாய்ந்ததை அடுத்து மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.