160 கோடி ரூபா நிதி மோசடி செய்த தம்பதியினர் கைது

160 கோடி ரூபா நிதி மோசடி செய்த தம்பதியினர் கைது

by Staff Writer 27-12-2024 | 8:33 PM

Colombo (News 1st) 160 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவுக்குச் தப்பிச் தப்பிச் சென்ற தம்பதியினர் மீண்டும் நாடு திரும்பிய சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னெடுத்த சோதனையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

கொழும்பு 5ச் சேர்ந்த அவர்கள் 2021 ஆம் ஆண்டு படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தனர்.

49 வயதான கணவர் மற்றும் 43 வயதான மனைவி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் நாட்டின் பல பகுதிகளிலும் பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் என முறையிடப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு நீதிமன்றங்களின் ஊடாக 08 வௌிநாட்டு பயணத் தடைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.