67 பேருடன் விபத்திற்குள்ளான அசர்பைஜான் விமானம்

67 பேருடன் விபத்திற்குள்ளான அசர்பைஜான் விமானம்

by Staff Writer 25-12-2024 | 7:06 PM

Colombo (News 1st) அசர்பைஜானுக்கு சொந்தமான பயணிகள் விமானம் கசக்ஸ்தானில் இன்று(25) வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

62 பயணிகள் மற்றும் 5 ஊழியர்களை ஏற்றிய விமானம் அசர்பைஜானின் தலைநகரான பாகுவிலிருந்து ரஷ்யாவின் செச்சினியாவிற்கு பயணத்தை ஆரம்பித்தது.

விமானத்தை அவசரமாக தரையிறக்குவதற்கு விமானிகளால் ​கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சில நிமிடங்களில் விமானம் விபத்திற்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து குறித்து கசக்ஸ்தான் மற்றும் அசர்பைஜான் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.