ஹட்டன் பஸ்ஸின் சாரதி விளக்கமறியலில்

ஹட்டன் பஸ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி விளக்கமறியலில்

by Staff Writer 22-12-2024 | 7:33 PM

Colombo (News 1st) ஹட்டன், மல்லியப்பூ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு சென்ற பதில் நீதவான், வைத்தியர்களிடம் அவரது நிலைமை தொடர்பில் விடயங்களைக் கேட்டறிந்த பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த 46 வயதான சாரதியே இந்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் - மல்லியப்பூ பகுதியில் தனியார் பஸ்ஸொன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து நேற்று(21) விபத்திற்குள்ளானது.

விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்.