வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பு

வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 19-12-2024 | 2:22 PM

Colombo (News 1st) வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய(19) ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.