Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் மூலம் தெரிவான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பாராளுமன்ற உறுப்பினராக இன்று(18) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர், டொக்டர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.