Colombo (News 1st) யாழ்.மாவட்டத்தில் லெப்டோபைரோசிஸ்(Leptospirosis)
எனப்படும் எலிக்காய்ச்சலால் 7 மரணங்கள் பதிவாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 76 பேர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் கரவெட்டி ஆகிய 3 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் லெப்டோபைரோசிஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.