இந்தியா நன்கொடையாக வழங்கவுள்ள ரயில் எஞ்சின்கள்

இந்தியா நன்கொடையாக வழங்கும் ரயில் எஞ்சின்களை தூர சேவைகளுக்கு பயன்படுத்த திட்டம்

by Staff Writer 14-12-2024 | 6:42 PM

Colombo (News 1st) இந்தியாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கவுள்ள எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் எஞ்சின்களை பொருட்கள் கொண்டு செல்லும் ரயில்களுக்கும் பயன்படுத்த முடியுமென இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது திணைக்களத்திடமுள்ள அதிக எடைகொண்ட மற்றும் தூரப் பிரதேசங்களுக்கான ரயில்களில் குறைபாடுகள் உள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

இந்தியாவிடமிருந்து கிடைக்கும் இந்த ரயில் எஞ்சின்களை குறைபாடுகளை நிவர்த்திப்பதற்காக பயன்படுத்தவுள்ளதாகவும் இலங்கை ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.