Colombo (News 1st) பெருந்தோட்டங்களில் நிலவும் குடியிருப்பு பிரச்சினையை நிவர்த்திப்பதற்காக மாடிக்குடியிருப்புகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அனுமதியின் கீழ் 6 இற்கும் குறைந்த மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட பகுதிகளில் 150,000 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான தேவை காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 10,000 வீடுகளுக்கான பணிகள் பூர்த்தியாகியுள்ளதுடன் மேலும் 990 வீடுகளை மக்களிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.