Colombo (News 1st) Sea of Sri Lanka கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு தமிழகம் தங்கச்சிமடத்தில் இன்று(07) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழகம் இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Sea of Sri Lanka கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கடந்த 5 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர்.
Sea of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 529 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களின் 68 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.