பாதுகாப்பு அமைச்சின் அதிரடி தீர்மானம்

பாதுகாப்பின் நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒன்றாக வரையறுக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்

by Staff Writer 04-12-2024 | 2:33 PM

Colombo (News 1st) பாதுகாப்பின் நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை குறைந்தபட்சம் ஒன்றாக வரையறுத்து வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

துப்பாக்கிகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நபரொருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது குறித்து ஆய்வு நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆய்வின் மூலம் வெளிப்படுத்தப்படும் உண்மைத்தன்மையின் அடிப்படையிலேயே மேலும் துப்பாக்கிகளை வழங்குவதா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவினால் இந்த பாதுகாப்பு ஆய்வு முன்னெடுக்கப்படும்.

துப்பாக்கி உரிமையாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏதும் இல்லாத பட்சத்தில் அவர்களிடமுள்ள துப்பாக்கிகளை மீளப் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.