Colombo (News 1st) அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
10ஆவது பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை அண்மையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்வைத்திருந்தார்.
அது தொடர்பான விவாதம் நேற்றும்(03) இன்றும்(04) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை இன்று மாலை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.