Colombo (News 1st) இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட Y FM இன்று(01) தனது 19 ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது.
எமது நாட்டின் இளைஞர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்குவதன் மூலம் ஒரு புரட்சிகரமான, தரமான மற்றும் முழுமையான வானொலி கலையை உருவாக்கும் முதன்மையான நோக்கத்துடன் இதே போன்றோரு நாளிள் இளைஞர்களுக்கான Y FM தொடங்கப்பட்டது.
அன்றிலிருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியின் ஊடாக இளைஞர்களை கவர்ந்த Y FM குறுகிய காலத்தில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட வானொலியாக மாறியது.
இளைஞர்களின் இதயத் துடிப்பை உணர்ந்து உலகப் போக்குகளுக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.
Y FM 92.7 என்ற அலைவரிசையில் இலங்கை பூராகவும் ஒலிபரப்பப்படுவதுடன் கடந்த வருடம் இலங்கை வானொலி வரலாற்றில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த இந்த அலைவரிசையால் முடிந்தது.