காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெறும் அபாயம்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் அபாயம் - வளிமண்டலவியல் திணைக்களம்

by Staff Writer 26-11-2024 | 5:04 PM

Colombo (News 1st) வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 150 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.