Colombo (News 1st) எழுபதாயிரம் மெட்ரிக் தொன் நாடு அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று(25) நடைபெற்றது.
பகிரங்க விலைமனு கோரலின் பின்னர் நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்யப்படுமென அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச வணிகக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா சதொச ஆகிய நிறுவனங்களின் ஊடாக அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இதனிடையே, சந்தையில் நாடு அரிசிக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவுகின்றது.