Colombo (News 1st) அடுத்த வருடத்தின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் தொடர்புடைய விவாதம் எதிர்வரும் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.