பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பதில்

மின் கட்டணத் திருத்த யோசனைக்கு மின்சார சபை கோரிய கால அவகாசத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று பதில்

by Staff Writer 25-11-2024 | 2:42 PM

Colombo (News 1st) மின் கட்டணத் திருத்த யோசனையை தயாரிப்பதற்கு இலங்கை மின்சார சபை மீண்டும் கால அவகாசம் கோரியுள்ளமை தொடர்பில் தமது பதிலை இன்று(25) அனுப்பவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டணத் திருத்த யோசனையை தயாரிப்பதற்காக இலங்கை மின்சார சபை இதற்கு முன்னரும் இரண்டு சந்தர்ப்பங்களில் கால அவகாசம் கோரியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய குறித்த யோசனையை சமர்ப்பிக்கும் நடவடிக்கை ஒருமாத காலம் தாமதமடைந்துள்ளது.

அதன்காரணமாக மின் கட்டணத் திருத்தத்தை இந்த ஆண்டில் மேற்கொள்வது நிச்சயமற்ற நிலையில் காணப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 22ஆம் திகதிக்கு முன்பதாக கட்டணத் திருத்த யோசனையை முன்வைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், மேலும் இரண்டு வாரகால அவகாசம் வழங்குமாறு மின்சார சபை மீண்டும் எழுத்துமூலம் அறிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்