பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டணத் திருத்த யோசனையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவிப்பு

by Staff Writer 25-11-2024 | 5:51 PM

Colombo (News 1st) எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் கட்டணத் திருத்த யோசனையை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

மேலும் இரண்டு வாரகால அவகாசம் வழங்குமாறு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பதில் வழங்கி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

உரிய தினத்திற்கு முன்னர் கட்டணத் திருத்த யோசைனையை முன்வைக்கத் தவறும் பட்சத்தில், மின்சார சபையின் இலாபத்திலிருந்து பயனாளர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நேரிடும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டணத் திருத்த யோசனையை தயாரிப்பதற்காக இலங்கை மின்சார சபை இதற்கு முன்னரும் இரண்டு சந்தர்ப்பங்களில் கால அவகாசம் கோரியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.