பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு வேலைத்திட்டம்

பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம்

by Staff Writer 22-11-2024 | 10:55 AM

Colombo (News 1st) குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழுள்ள அதிகாரிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

தொலைதூரப் பகுதிகளில் பணிக்கமர்த்தப்படுகின்றமை, தொடர்ச்சியாக கடமைகளில் அமர்த்தப்படுதல், முறையான பதவி உயர்வு நடைமுறை இன்மை, முறையற்ற இடமாற்றம் போன்ற பல பிரச்சினைகள் காணப்படுவதாக அவர் கூறினார்.

இப்பிரச்சினைகள் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிவர்த்திப்பதற்கான  முறைமையைத் தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பெருமைக்குரிய பொலிஸ் அதிகாரியாக, தனது தொழில் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில், பொலிஸ் அதிகாரிகள் பணியாற்றத் தேவையான சூழலை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.