முதலாம் கட்ட உர விநியோகம் நிறைவு

பெரும்போகத்திற்கான முதலாம் கட்ட உர விநியோகம் நிறைவு - விவசாய சேவைகள் திணைக்களம்

by Staff Writer 19-11-2024 | 2:28 PM

Colombo (News 1st) பெரும்போகத்திற்கான முதலாம் கட்ட உர நிவாரணம் வழங்கும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளது.

23 மாவட்டங்களில் 86,162 ஹெக்டேயர் விவசாயக் காணிகளுக்காக இந்த உர நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

129,229 விவசாயிகளுக்காக 1292.4 மில்லியன் ரூபா உர நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் விதத்திற்கு ஏற்ப விவசாயிகளுக்கு உர நிவாரணம் வழங்கப்படுமென விவசாய சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை கிரிதலே மற்றும் கவுடுல்ல நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் விடுவிக்கப்படுகின்றமை தாமதமடைந்துள்ளமையால் அந்த பகுதிகளுக்கான உர நிவாரணமும் தாமதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.