சர்வதேச நாணய நிதியத்தின் குழு நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று(17) நாட்டிற்கு வருகை தந்துள்ளது

by Staff Writer 17-11-2024 | 6:33 PM

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று(17) நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

இலங்கை தொடர்பான மூன்றாவது  மீளாய்வு நடவடிக்கைகளுக்காகவே  இந்தக்குழு வருகை தந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதி, அமைச்சின் அதிகாரிகள்  மற்றும் வங்கி உத்தியோகத்தர்களை சந்திக்கவுள்ளதாக   நிதி அமைச்சு கூறியுள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை(22) மூன்றாவது மீளாய்வின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை  நிறைவு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நடவடிக்கை எடுக்கும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.