பொதுத் தேர்தலில் தபால்மூல வாக்கு முடிவுகளில் தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம் மேலோங்கி காணப்பட்டது.
22 தேர்தல் மாவட்டங்களில் 21ஐ தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமே தேசிய மக்கள் சக்தி இரண்டாமிடத்தைப் பெற்றது.
இங்கு தபால்மூல வாக்கு முடிவுகளுக்கு அமைவாக இலங்கை தமிழரசுக் கட்சி 5236 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைக் கைப்பற்றியது.
தேசிய மக்கள் சக்தி 3412 வாக்குகளுடன் இரண்டாமிடத்தையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 1383 வாக்குகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றன.
யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது. பெரும்பாலான மாவட்டங்களில் 78 வீதத்திற்கும் அதிகமான மக்கள்
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.