Colombo (News 1st) 2024 பொதுத் தேர்தலில் வாக்குச்சீட்டை அல்லது வாக்களிப்பதை புகைப்படமெடுப்பதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் விதிகளை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.