Colombo (News 1st) நியூசிலாந்து அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கையின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க விலகியுள்ளார்.
நியூசிலாந்துக்கு இரண்டாவது 20 க்கு 20 கிரிக்கெட் போட்டியின் போது உபாதைக்குள்ளாகியமை காரணமாக அவர் இவ்வாறு தொடரில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக சகலதுறை வீரர் துஷான் ஹேமந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று(12) அறிக்கை ஊடாக அறிவித்துள்ளது.
மூன்று போட்டிகளை கொண்ட இலங்கை - நியூசிலாந்து ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை(13) தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் ஆரம்பமாகின்றது.