பயறு உற்பத்தியை சதொச ஊடாக கொள்வனவு செய்ய தீர்மானம்

உள்நாட்டு விவசாயிகளின் பயறு உற்பத்தியை சதொச ஊடாக அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வர்த்தக அமைச்சு தீர்மானம்

by Staff Writer 10-11-2024 | 3:21 PM

Colombo (News 1st) உள்நாட்டு விவசாயிகளின் பயறு உற்பத்தியை சதொச ஊடாக அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு பயறு கொள்வனவு செய்கின்றமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.நய்முதீன் தெரிவித்தார்.

சதொச ஊடாக ஒரு கிலோகிராம் பயறு 488 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.

இடைத்தரகர்கள் இதனை 425 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.