Colombo (News 1st) Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 படகுகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
இதேவேளை, தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டிற்கு வருகை தந்த 9 இலங்கைப் பிரஜைகள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 குடும்பங்களை சேர்ந்த 2 ஆண்களும் 3 பெண்களும் 4 சிறுவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
எரிபொருள் பற்றாக்குறையால் படகு இயங்காமல் இருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.