ஐ.நா அதிகாரி - கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

ஐ.நாவின் அமைதி மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் - கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

by Staff Writer 08-11-2024 | 3:51 PM

Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் Patrick Mc Carthy மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சினை, மீள்குடியேற்றம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் தேவையற்ற அரசியல் தலையீடுகளை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது என ஆளுநர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை அண்மித்துள்ள வீதிகள் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளமையை பாராட்டிய ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர், இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என கூறியுள்ளாார்.

அத்துடன், கல்வி, சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.